ஆக்கிரமிப்புகள் அகற்றம்

அரியலூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.

Update: 2021-03-08 20:18 GMT
அரியலூர்:
அரியலூர் கைலாசநாதர் கோவில் தெருவில் மழைநீர் வடிகால் வாய்க்கால் உள்ளது. கடந்த 30 ஆண்டுகளாக பராமரிப்பின்றி இருந்ததால் வாய்க்கால் தூர்ந்து போய்விட்டது. கடந்த மாதம் தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பு அந்த பகுதியில் கழிவுநீர் கால்வாய் புதிதாக கட்ட பணிகள் தொடங்கப்பட்டன. அந்த பகுதியில் உள்ள கட்டிட உரிமையாளர்கள், வாய்க்காலின் மீது கான்கிரீட் கட்டிடம் கட்டி இருந்தனர். ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளை தொடங்க நகராட்சி நிர்வாகம் பலமுறை முயன்றும், கட்டிட உரிமையாளர்கள் தங்களிடம் நீதிமன்ற உத்தரவு உள்ளது என்று காரணம் காட்டி தடுத்து வந்தனர். அவற்றை ஆய்வு செய்த அதிகாரிகள் நேற்று ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்த கட்டிட பகுதிகளை இடிப்பதற்கு உத்தரவிட்டனர். இதையடுத்து பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

மேலும் செய்திகள்