ஆண்டாள்-ரெங்கமன்னார் திருக்கல்யாண விழா

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் - ரெங்கமன்னார் திருக்கல்யாண விழா நாளை ெகாடியேற்றத்துடன் தொடங்குகிறது

Update: 2021-03-18 20:05 GMT
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் - ரெங்கமன்னார் திருக்கல்யாண விழா நாளை ெகாடியேற்றத்துடன் தொடங்குகிறது 
பங்குனி உத்திரம் 
108 வைணவத்திருத்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆகும். 
இந்த கோவிலில் ஆண்டுேதாறும் பங்குனி மாதம் பங்குனி உத்திரத்தன்று ஆண்டாள், ெரங்கமன்னார் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். 
 கடந்த ஆண்டு ெகாரோனா பரவலை தடுக்கும் வகையில் திருக்கல்யாண விழா கோவிலுக்குள்ளேயே நடைபெற்றது. இதில் பக்தர்கள் யாருக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை. 
திருக்கல்யாணம் 
இந்த ஆண்டு திருக்கல்யாண விழா வருகிற 28-ந் தேதி இரவு 7 மணி முதல் 8 மணிக்குள் நடைபெறுகிறது.
திருக்கல்யாண திருவிழாவை முன்னிட்டு நாளை (சனிக்கிழமை) காலை 11 மணி முதல் 12 மணிக்குள் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
 அதன் பிறகு தினமும் ஆண்டாள், ரெங்கமன்னார் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி இளங்கோவன், கோவில் பணியாளர்கள், திருக்கல்யாண கமிட்டியினர் ஆகியோர் செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்