அனுமதியை மீறி திம்பம் மலைப்பாதையில் இயங்கிய லாரி பறிமுதல்

அனுமதியை மீறி திம்பம் மலைப்பாதையில் இயங்கிய லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2021-03-24 23:44 GMT
சத்தியமங்கலம்
சத்தியமங்கலம் அருகே 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய திம்பம் மலைப்பாதை அமைந்துள்ளது. இந்த வளைவுகளில் அதிக பாரம் ஏற்றிச் செல்லும் லாரிகள் அடிக்கடி பழுதாகி நின்று விடுகிறது. இதனால் பல மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு பயணிகள் துன்பத்திற்கு ஆளாகிறார்கள்.
இதனைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் 12 சக்கரத்துக்கு மேல் உள்ள வாகனங்கள் திம்பம் மலைப்பாதையில் செல்ல அனுமதி இல்லை என உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து கோவைக்கு திம்பம் மலைப்பாதை வழியாக 14 சக்கரங்கள் கொண்ட லாரி நேற்று முன்தினம் வந்து கொண்டிருந்தது.
பண்ணாரி ேசாதனைச்சாவடியில் சென்றபோது அங்கிருந்த வட்டார போக்குவரத்து அதிகாரிகள் லாரியை தடுத்து நிறுத்தினார்கள். பின்னர் திம்பம் மலைப்பாதையில் அனுமதியின்றி இயங்கியதாக கூறி லாரியை பறிமுதல் செய்தார்கள்.

மேலும் செய்திகள்