சென்னிமலை அருகே பயங்கரம் தந்தையை கம்பியால் அடித்து கொன்ற ஆசிரியர் கைது மதுபோதையில் தகராறு செய்ததால் ஆத்திரம்

சென்னிமலை அருகே மதுபோதையில் தகராறு செய்த தந்தையை அடித்துக்கொன்ற ஆசிரியர் கைது செய்யப்பட்டார். இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

Update: 2021-03-30 20:18 GMT
சென்னிமலை அருகே மதுபோதையில் தகராறு செய்த தந்தையை அடித்துக்கொன்ற ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
மதுபோதையில் தகராறு
சென்னிமலை அருகே உள்ள கருங்கவுண்டன்வலசு காலனியை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 72). இவர் தனது வீடு அருகே பெட்டிக்கடை நடத்தி வந்தார். அவருடைய மனைவி தனலட்சுமி. இவர்களுடைய மகன் சிவானந்தம் (51). இவர் சென்னிமலை பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
சிவானந்தம் திருமணம் ஆகி அதே பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். பழனிசாமிக்கு மது குடிக்கும் பழக்கம் உண்டு. தினமும் மது குடித்துவிட்டு் வீட்டுக்கு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்தார்.
அடித்துக்கொலை
அதேபோல் அவர் நேற்று காலையில் மது குடித்து விட்டு வீட்டு்க்கு வந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது சாப்பாடு சரியில்லை என மனைவி தனலட்சுமியிடம் கூறி தகராறில் ஈடுபட்டார். இதில் ஆத்திரம் அடைந்து அவர் சாப்பாட்டை தூக்கி எறிந்துள்ளார்.
மேலும் சிவானந்தம் வீட்டு்க்கு சென்று அவரையும் திட்டியுள்ளார். இதனால் சிவானந்தத்துக்கும், பழனிசாமிக்கும் இடையே தகராறு ஏற்பட்டு்ள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த பழனிசாமி, மகன் சிவானந்தத்தை தாக்க முயற்சி செய்துள்ளார். அப்போது சிவானந்தம் அருகில் கிடந்த தேங்காய் உரிக்க பயன்படும் கம்பியை எடுத்து பழனிசாமியை ஓங்கி அடித்துள்ளார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். 
ஆசிரியர் கைது
இதுபற்றி அக்கம்பக்கத்தினர் சென்னிமலை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பழனிசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை ஐ.ஆர்.டி.டி. மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிவானந்தத்தை கைது செய்தனர். மதுபோதையில் தகராறு செய்த தந்தையை பள்ளிக்கூட ஆசிரியர் அடித்துக்கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்