அரசு கலைக்கல்லூரி கொண்டு வந்த எனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டுகிறேன் அ.தி.மு.க. வேட்பாளர் வைகைச்செல்வன் பேச்சு

அருப்புக்கோட்டை தொகுதி மக்களுக்காக அரசு கலைக்கல்லூரி கொண்டு வந்த எனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டுகிறேன் அன்பு நகர் பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் வைகைச்செல்வன் பேச்சு.

Update: 2021-04-04 03:22 GMT
விருதுநகர்,

முஸ்லீம் பஜார், வி.வி.ஆர்.காலனி ஆகிய பகுதிகளில் வீதி வீதியாக சென்று இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது.

அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் வைகைச்செல்வன் நகர் பகுதிகளான நெசவாளர் காலனி, அன்பு நகர், சத்யவாணிமுத்து காலனி, முஸ்லீம் நடுத்தெரு, முஸ்லீம் பஜார், வி.வி.ஆர்.காலனி ஆகிய பகுதிகளில் வீதி வீதியாக சென்று இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது.

அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு அ.தி.மு.க. வேட்பாளராக தொகுதியின் உங்கள் செல்லப்பிள்ளையாகிய என்னை முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வேட்பாளராக அறிவித்துள்ளார். அதனை ஏற்று தொகுதி மக்களின் பணிகளை செய்ய 3வது முறையாக போட்டியிட வந்துள்ளேன். 

கடந்த முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த போது தொகுதி மக்கள் நலன் பெறும் வகையில் அரசு கலைக்கல்லூரி, ஜ.டி.ஜ. தொழிற் பயிற்சி பள்ளி, மாணவ, மாணவிகளுக்கு இலவச மடிக்கணினி, போக்குவரத்து போலீஸ் ஸ்டேசன், வட்டார போக்குவரத்து அலுவலகம், கட்டங்குடி பகுதிகளில் அம்மா நகரம் போன்ற எண்ணற்ற பணிகளை மேற்கொண்டுள்ளேன். 

அருப்புக்கோட்டை தொகுதி மக்கள் சிந்திக்க வேண்டும்.  வரும் சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்று எடப்பாடி பழனிச்சாமி முதல் அமைச்சராக பதவியேற்றவுடன் அருப்புக்கோட்டை நகர் பகுதிகளின் முக்கிய பிரச்சனைகளான வாறுகால் வசதி, சாலை வசதி, குடிநீர் வசதி, மின்சார வசதிகளுக்கு முக்கியதுவம் கொடுத்து அப்பணிகளை உடனடியாக மேற்க்கொள்வேன், மேலும் அ.தி.மு.க. அறிக்கையில் அறிவித்த திட்டங்களான முதியோர் உதவி தொகை, 6 கேஸ் சிலிண்டர் இலவசம், தாமிரபரணி குடிநீர் அனைத்து பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கும் உடனடியாக தொகுதி மக்களுக்கு கிடைக்க பணிகளை இரவு பகல் பாராது பணிகளை மேற்க்கொள்வேன். மேலும் நகரின் முக்கிய கோரிகைகளான், நெசவாளர்களுக்கு ஜவுளி புங்கா, கருந்திரி தொழிலை ஒருவித அச்சத்துடன் செய்து வருகின்றனர்.  கருந்திரி தொழில் செய்து வரும் பொதுமக்களின் அச்சத்தை போக்கும் வகையில் தொழிலை  பாதுகாப்புடன் செய்வதற்கும், அதனை குடிசை தொழிலாக மாற்றி அமைப்பதற்கான அ.தி.மு.க. அரசு வெற்றி பெற்று ஆட்சி அமைத்தவுடன் உரிய நடவடிக்கை மேற்க்கொள்ளப்படும். நெசவாளர்களின் முக்கிய கோரிக்கையான சுத்திகரிக்கபட்ட சாயப்பட்டறை அமைத்து கொடுக்கப்படும் என்ற பேசினார். 

பின்னர் மாலையில் அ.தி.மு.க வேட்பாளர் வைகைச்செல்வன் எம்.எஸ்.கார்னர், அண்ணாசிலை பகுதிகளில் தேர்தல் பரப்புரையை தொடர்ந்தார், இதேபோல் வர்தக சங்க தலைவரும், எஸ்.பி.கே. கல்வி குழும தலைவருமான அண்ணாச்சி சுதாகர் அவர்களும் அ.தி.மு.விற்கு ஆதரவு கோரியுள்ளார்கள். நான் தேர்தல் பிரச்சாரத்தில் பல்வேறு சாதனைகளை சொல்லி இரட்டை இலை சின்னத்திற்கு  வாக்கு சேகரித்து வருகிறேன்.  ஆனால் எதிர்கட்சியினர் எந்த சாதனையையும் சொல்லி வாக்கு கேட்க முடியவில்லை. பிரச்சாரம் செய்கின்ற  இடங்களில் எல்லாம் இது எனக்கு கடைசி தேர்தல் என்பதால் எனக்கு வாக்களியுங்கள் என்று கெஞ்சி கேட்கிறார். இந்த வார்த்தை தான் அவர்களின் சாதனையாக உள்ளது. 

எதிர்கட்சி வேட்பாளருக்கு பிரச்சாரம் செய்வதற்கு வேட்பாளர் செல்லாமல், அவர் கட்சியினரை வைத்து பிரச்சாரம் செய்து வருகிறார்.  எனவே வரும் சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ள வைகைச்செல்வன் என்னும் எளியவனை இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். 
அ.தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தவுடன் அருப்புக்கோட்டை தொகுதிக்கு பல்வேறு பணிகளை மேற்க்கொண்டு தமிழகத்தில் அருப்புக்கோட்டை தொகுதியை முன்மாதிரி தொகுதியாக மாற்றி காட்டுவேன் என்று பேசினார். நிகழ்ச்சியில் அ.தி.மு.க. நகர செயலாளர் சக்திவேல்பாண்டியன், நகர அம்மா பேரவை செயலாளர் சோலை சேதுபதி, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற தலைவர் ராமர், தகவல் தொழில் நுட்ப செயலாளர் கருப்பசாமிபாண்டியன், முன்னாள் நகர் மன்ற உறுப்பினர்கள் செல்வேந்திரன், ராமச்சந்திரன், தெய்வரத்தினம், புளியம்பட்டி சீனிவாசன், வார்டு செயலாளர்கள் சின்னச்சாமி, கோகுல், விஜயராகவன், துரைராஜ், ஒன்றிய இளைஞரணி செயலாளர் ராம்பாண்டியன் கூட்டணி கட்சி நிர்வாகிகள், ரஜினிமக்கள் மன்ற நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்