கடந்த 10 ஆண்டுகளில் மணப்பாறை தொகுதி வளர்ச்சி பெற்றிருக்கிறதா? தே.மு.தி.க. வேட்பாளர் வக்கீல் கிருஷ்ணகோபால் கேள்வி

மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் அ.ம.மு.க., தே.மு.தி.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் சார்பில் போட்டியிடும் தே.மு.தி.க. வேட்பாளர் வக்கீல் கிருஷ்ணகோபால் தொகுதி முழுவதும் சூறாவளிச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

Update: 2021-04-04 03:45 GMT
மணப்பாறை, 

மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் அ.ம.மு.க., தே.மு.தி.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் சார்பில் போட்டியிடும் தே.மு.தி.க. வேட்பாளர் வக்கீல் கிருஷ்ணகோபால் தொகுதி முழுவதும் சூறாவளிச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். 

இந்தநிலையில் நேற்று இறுதிகட்ட பிரசாரத்தில் ஈடுபட்ட அவர் முரசு சின்னத்திற்கு வாக்களிடத்திட கேட்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

இந்த மணப்பாறை தொகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக எம்.எல்.ஏ.வாக இருந்தவரால் இதுவரை ஏதாவது நல்லது நடந்துள்ளதா? மணப்பாறை தொகுதி வளர்ச்சி பெற்றிருக்கிறதா? ஒரு கலை அறிவியல் கல்லூரியாவது வந்திருக்கிறதா? கண்டிப்பாக வராது. தொகுதி பக்கமே செல்லாதவர் எப்படி தொகுதியை வளர்ச்சியடையச் செய்வார். இருந்தும் பயனற்றவராகத்தான் இத்தனை காலம் இருந்திருக்கிறார்.இதே போல் இப்போது தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடுகின்றவர் சென்னையில் இருந்து வந்திருக்கிறார். எங்கிருந்தோ வந்தவருக்காக உங்கள் ஓட்டு. ஆனால் இந்த மண்ணின் மைந்தன் நான். எந்தவித அரசு பொறுப்புகளிலும் இல்லாமல் கொரோனா காலம் தொடங்கி தற்போது வரை எண்ணால் முடிந்த அனைத்து உதவிகளையும் தொகுதி வளர்ச்சிக்கான முயற்சிகளையும் மேற்கொண்டு வந்ததன் காரணமாகத்தான் சுமார் 2 ஆயிரத்திற்கும் அதிகமானவர்களுக்கு என்மூலம் வேலை வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.ஆகவே இந்த தேர்தலை பொறுத்தவரை மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டிய தேர்தல் என்பதை கவனம் கொள்ள வேண்டும். இருகட்சிகளையும் இத்தோடு ஓரம்கட்டி விட்டு முரசு சின்னத்திற்கு வாக்களித்து மகத்தான வெற்றியை மணப்பாறை தொகுதி மக்கள் தர வேண்டும் என்று பணிவன்புடன் வேண்டி கேட்டுக் கொள்கின்றேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்