அ.தி.மு.க. நிர்வாகிகள் 2 பேர் மீது வழக்கு

இளையான்குடி அருகே பணப்பட்டுவாடா செய்ததாக அ.தி.மு.க. நிர்வாகிகள் 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

Update: 2021-04-04 17:55 GMT
இளையான்குடி,

இளையான்குடி அருகே உள்ள பரத்தவயல் கிராமத்தில் ஓட்டுக்காக பணப்பட்டுவாடா செய்வதாக தேர்தல் பறக்கும் படையினருக்கு புகார் வந்தது. இந்த புகாரின் பேரில் தேர்தல் பறக்கும் படையினர் பரத்தவயல் கிராமத்துக்கு சென்றனர். அங்கு இருந்த அ.தி.மு.க. நிர்வாகிகளான பரத்தவயல் கிராமத்தை சேர்ந்த சங்கர்(வயது 43), தென்கடுக்கை கிராமத்தை சேர்ந்த கார்த்தி(35) ஆகிய 2 பேரிடம் பரிசோதித்த போது ரூ.59 ஆயிரத்து 500 இருந்தது. அந்த பணம் குறித்து விசாரித்த போது இருவரும் சரிவர பதில் அளிக்கவில்லை. இது குறித்து பறக்கும்படை அதிகாரி சசிகுமார் சாலைக்கிராமம் போலீசில் புகார் செய்தார். இதன் பேரில் போலீசார் பணத்தை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக அவர்கள் 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்