நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலைரூ.10 காசுகள் உயர்வு

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலைரூ.10 காசுகள் உயர்வு

Update: 2021-04-06 02:37 GMT
நாமக்கல்:
நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 10 காசுகள் உயர்த்தப்பட்டு, 420 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
10 காசுகள் உயர்வு
நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 410 காசுகளாக இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் அதன் விலையை 10 காசுகள் உயர்த்த முடிவு செய்தனர். எனவே முட்டை கொள்முதல் விலை 420 காசுகளாக உயர்ந்து உள்ளது.பிற மண்டலங்களில் முட்டை விலை காசுகளில் வருமாறு:-
சென்னை-440, ஐதராபாத்-378, விஜயவாடா-396, மைசூரு-436, மும்பை-434, பெங்களூரு-430, கொல்கத்தா-450, டெல்லி-398.
உற்பத்தி குறைந்தது
நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ ரூ.113-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று பல்லடத்தில் நடந்த கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.2 உயர்த்த முடிவு செய்தனர். எனவே கறிக்கோழி விலை கிலோ ரூ.115 ஆக உயர்ந்து உள்ளது. முட்டைக்கோழி கிலோ ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை என பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.
வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளதால் முட்டை உற்பத்தி 15 சதவீதம் வரை குறைந்து உள்ளது. அதே நேரத்தில் தேர்தல், ஈஸ்டர் பண்டிகை நிறைவு என்பது உள்ளிட்ட காரணங்களால் முட்டைக்கான தேவை அதிகரித்து உள்ளது. இதுவே முட்டை விலை உயர்வுக்கு காரணம் என பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.
=======

மேலும் செய்திகள்