நெகமம் வடசித்தூர் சாலையில் மண் குவியலால் விபத்து ஏற்படும் அபாயம்

நெகமம்-வடசித்தூர் சாலையில் மண் குவியல் காரணமாக விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

Update: 2021-04-07 16:59 GMT
நெகமம்

நெகமம்-வடசித்தூர் சாலையில் மண் குவியல் காரணமாக விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

சாலை ஓரத்தில் மண் குவியல் 

நெகமத்தில் இருந்து வடசித்தூர் செல்லும் சாலையில் மின்சார வாரியம் அலுவலகம் அருகில் வளைவு உள்ளது. இந்த பகுதியில் சாலையின் ஓரத்தில் குடிநீர் குழாய் அமைக்க தோண்டப்பட்டது. பின்னர் அங்கு குழாய் போடப்பட்டது. 

ஆனால் குழியை மூடவில்லை. இதனால் சாலை ஓரத்தில் மண் குவித்து வைக்கப்பட்டு உள்ளது. இந்த பகுதி வளைவானது என்பதால், வேகமாக வரும் வாகனங்கள், சாலை ஓரத்தில் மண் குவியல் இருப்பதால் அதன் மீது மோதி விபத்து ஏற்பட்டு வருகிறது. 

அடிக்கடி விபத்து 

குறிப்பாக இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள்தான் அதிகளவில் விபத்துகளில் சிக்கி காயங்களுடன் உயிர் தப்பித்து செல்லும் சம்பவம் அடிக்கடி ஏற்பட்டு வருகிறது. 

இந்த குழியை மூடி மண் குவியலை அகற்ற வேண்டும் என்று பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை.

 இது குறித்து அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கூறும்போது, இந்த பகுதியில் குழி தோண்டப்பட்டு குழாய் அமைத்து 2 மாதங்களுக்கு மேல் ஆகிறது. ஆனால் இன்னும் மூடவில்லை. 

எனவே விபத்துகள் நடப்பதை தடுக்க இந்த குழியை மூடுவதுடன், குவித்து வைத்திருக்கும் மண் குவியலை அகற்ற வேண்டும் என்றனர்.

மேலும் செய்திகள்