உரிய ஆவணங்களை காண்பித்ததால் ரூ.2¼ கோடி உரியவர்களிடம் திரும்ப ஒப்படைப்பு

உரிய ஆவணங்களை காண்பித்ததால் ரூ.2 கோடியே 28 லட்சத்து 75 ஆயிரத்து 610 உரியவர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டு உள்ளது.

Update: 2021-04-07 18:13 GMT
ஊட்டி,

நீலகிரியில் சட்டமன்ற தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வது, மதுபானங்கள் வழங்குவது, பரிசு பொருட்கள் வினியோகிப்பது போன்றவற்றை தடுக்க பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழு உள்பட மொத்தம் 60 குழுக்கள் அமைக்கப்பட்டு இருந்தது. 

தேர்தல் முடிந்ததால் குழுக்கள் விலக்கி கொள்ளப்பட்டது. நீலகிரியில் இதுவரை ஊட்டி சட்டமன்ற தொகுதியில் ரூ.66 லட்சத்து 11 ஆயிரத்து 610, கூடலூர் தொகுதியில் ரூ.ஒரு கோடியே 7 லட்சத்து 72 ஆயிரத்து 980, குன்னூர் தொகுதியில் ரூ.73 லட்சத்து 91 ஆயிரத்து 620 என மொத்தம் ரூ.2 கோடியே 47 லட்சத்து 76 ஆயிரத்து 210 பறிமுதல் செய்யப்பட்டது. 

உரிய ஆவணங்களை காண்பித்ததால் ரூ.2 கோடியே 28 லட்சத்து 75 ஆயிரத்து 610 உரியவர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டு உள்ளது. தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக 3 தொகுதிகளில் இதுவரை அரசியல் கட்சியினர் மீது 65 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.

மேலும் செய்திகள்