ஊட்டி-கூடலூர் சாலையில் பாலம் கட்டும் பணியால் போக்குவரத்து நெரிசல்

ஊட்டி-கூடலூர் சாலையில் பாலம் கட்டும் பணியால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனர்.

Update: 2021-04-08 14:23 GMT
ஊட்டி

ஊட்டி-கூடலூர் சாலையில் பாலம் கட்டும் பணியால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனர்.

பாலம் கட்டும் பணி

நீலகிரி மாவட்டம் ஊட்டி-கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக டி.ஆர்.பஜார் அருகே ரூ.2 கோடி மதிப்பில் பாலம் கட்டும் பணி நடைபெற்றது. 

இந்த பணி முடிந்து சாலையின் இருபுறமும், சாலையை உயர்த்தி மண்மேடு அமைக்கும் பணி கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது. இதனால் ஊட்டி-கூடலூர் சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

 இதனால் வாகன ஒட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். கனரக மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்லும் அதிகளவிலான மண் புழுதி கிளம்புகிறது.  இதனால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

விரைந்து முடிக்க வேண்டும்

இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில், ஊட்டி-கூடலூர் சாலையில் பாலம் கட்டும் பணியால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் தூசி மாசு காரணமாக வாகன ஓட்டிகளை பாதிக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

மேலும் மழைக்காலங்களில் சாலை சேறும், சேகதியுமாக மாறி வாகன போக்குவரத்து செல்ல முடியாத நிலை ஏற்படும். எனவே சாலை பணியையும், பாலம் அமைக்கும் பணியையும் விரைந்து முடிக்க தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்