சோளிங்கர் பெரிய மலை யோகநரசிம்மர் கோவிலில் ரோப்கார் பணிக்காக கம்பி வடம் இணைந்து சோதனை ஓட்டம் நடந்தது.

சோளிங்கர் பெரிய மலை யோகநரசிம்மர் கோவிலில் ரோப்கார் பணிக்காக கம்பி வடம் இணைந்து சோதனை ஓட்டம் நடந்தது.

Update: 2021-04-08 16:45 GMT
சோளிங்கர்

யோகநரசிம்மர் கோவில்

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற வைணவ தலங்களில் ஒன்றாக சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவில் திகழ்கிறது. அங்கு பெரிய மலையில் யோக நரசிம்மர் கோவில் உள்ளது. கோவிலுக்கு செல்ல 1,305 படிகட்டுகள் உள்ளன. யோக நரசிம்மர் ஆண்டுக்கு 11 மாதம் யோக நிலையில் இருப்பார். ஆனால் கார்த்திகை மாதத்தில் மட்டும் கண் திறந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார் என்பது ஐதீகம்.

முதியோர், மாற்றுத்திறனாளிகள் மலையேறி சென்று யோக நரசிம்மரை தரிசனம் செய்ய முடியவில்லை என்பதால் அனைத்துப் பக்தர்களுக்கும் வசதியாக ரோப் கார் அமைக்க வேண்டும் என அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. கோரிக்ைகயை பரிசீலனை செய்த அரசு 15 ஆண்டுகளுக்கு முன்பு ரோப்கார் அமைக்கும் பணியை தொடங்கியது. 

கம்பி வடம் சோதனை ஓட்டம்

அந்தப் பணி ஆமை வேகத்தில் நடந்து வந்தது. தற்போது ரோப்கார் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அந்தப் பணி தற்போது முடிவடையும் நிலையில் உள்ளது. பெரியமலையில் இருந்து மலையடிவாரம் ரோப்கார் கட்டிடம் வரை கம்பி வடம் இணைக்கப்பட்டு ஜெனரேட்டர் மூலம் சோதனை ஓட்டம் நடந்தது.
 
அதைத்தொடர்ந்து கம்பி வடத்தில் தொங்க விடப்படும் பெட்டி இணைக்க படவேண்டும். உயர்தர மின் கேபிள் அமைக்கும் பணி விரைவில் நடைபெற உள்ளது. இந்தப் பணிகள் முடிந்ததும் தொடர்ந்து பெட்டியுடன் சோதனை ஓட்டம் நடைபெறும். அதன் பிறகு பக்தர்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படும், என அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்