ஜவுளி வியாபாரியிடம் நூதன முறையில் பணமோசடி

ஜவுளி வியாபாரியிடம் நூதன முறையில் பணமோசடி செய்யப்பட்டது.

Update: 2021-04-13 19:04 GMT
கரூர்
கரூர் அருகே உள்ள வாங்கல் அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் நாகராஜன் (வயது 36). இவர் கரூரில் உள்ள ஜவுளி நிறுவனம் ஒன்றில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர் வாங்கல் போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்று கொடுத்தார். அதில் சம்பவத்தன்று நான் வீட்டில் இருந்தபோது செல்போன் மூலம் தனக்கு ஒரு அழைப்பு வந்தது.  அதில் பேசியவர் தனது பெயர் முருகன் என்றும் ஒரு வங்கியில் முதன்மை கிரெடிட் கார்டு அதிகாரியாக பணியாற்றுவதாக அறிமுகப்படுத்திக் கொண்டார். பின்னர் அவர் உங்களது செல்போன் எண்ணுக்கு ஒரு ஓ.டி.பி.எண் வந்திருக்கும். அதை தனக்கு சொல்லுமாறும், தனது கிரெடிட் கார்டுகளில் கிளைம் செய்யப்படாமல் இருந்த ரிவார்டு புள்ளிகளை ரொக்கமாக மாற்றி தருவதாக கூறினார். அதன்பேரில் தனது செல்போன் எண்ணிற்கு வந்திருந்த ஓ.டி.பி. எண்ணை அவரிடம் தெரிவித்தேன். சிறிது நேரத்தில் எனது வங்கிக்கணக்கில் இருந்து முதலில் ரூ.26 ஆயிரத்து 882-ம், அதன் பிறகு ரூ.6,050-ம் எடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அவரை தொடர்பு கொள்ள முயன்றபோது அந்த எண் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.  இந்த நூதன மோசடியில் ஈடுபட்ட அந்த நபர் மீது நடவடிக்கை எடுத்து எனது பணத்தை மீட்டுத்தர வேண்டும் என்று கூறியிருந்தார். அந்த புகாரின் அடிப்படையில் வாங்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிவு செய்து இந்த நூதன மோசடியில் ஈடுபட்ட மர்ம நபரை வலைவீசி தேடி வருகிறார்.

மேலும் செய்திகள்