தியாகராயநகரில் உள்ள திருமலை திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

தியாகராயநகரில் உள்ள திருமலை திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் யுகாதி வாழ்த்துகள் பரிமாறி கொண்டனர்.

Update: 2021-04-14 12:47 GMT
சென்னை, 

சென்னை தியாகராயநகரில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானம் கீழ் செயல்படும் வெங்கடேச பெருமாள் கோவிலில் தெலுங்கு வருட பிறப்பான யுகாதியை முன்னிட்டு நேற்று கோவில் முழுவதும் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு மூலவருக்கு பட்டு வஸ்திரம் சமர்பிக்கப்பட்டு, சுப்ரபாதம், தோமாலை சேவை நடந்தது.

கோவிலுக்குள் முககவசம் அணிந்து வந்த பக்தர்கள் மட்டும் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து கோவிலில் பக்தர்களுக்கு கைகளை சுத்தம் செய்ய கிருமி நாசினி வழங்கப்பட்டதுடன், உடல் வெப்பநிலையும் கணக்கிடப்பட்டது. தொடர்ந்து பக்தர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் நீண்ட வரிசையில் சென்று, திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பூ மற்றும் குங்குமம் பிரசாதம் வழங்கப்பட்டது. சாமி தரிசனம் செய்த பக்தர்கள் ஒருவரை ஒருவர் யுகாதி வாழ்த்துகளையும் பரிமாறிக்கொண்டனர். ஏற்பாடுகளை உள்ளூர் ஆலோசனைக்குழு தலைவர் ஏ.ஜே.சேகர் ரெட்டி உள்ளிட்ட அறங்காவலர்கள் செய்து இருந்தனர்.

மேலும் செய்திகள்