கொரோனா வேகமாக பரவுவதால் மளிகை கடைகள், ஓட்டல்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் சேலம் மாநகர போலீஸ் எச்சரிக்கை

மளிகை கடைகள், ஓட்டல்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்

Update: 2021-04-14 22:58 GMT
சேலம்:
சேலம் மாநகராட்சி பகுதியில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் அதை கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம், காவல்துறை மற்றும் சுகாதாரத்துறை இணைந்து பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இந்நிலையில், சேலம் மாநகர் பகுதியில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களையும் போலீஸ் கமிஷனர் சந்தோஷ்குமார் போனில் தொடர்பு கொண்டு மளிகை கடைகள், ஓட்டல்களில் வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். முககவசம் அணிந்து வருவதை உறுதி செய்ய வேண்டும் என்றும், இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
இதனை தொடரந்து சேலம் சூரமங்கலம் வாணி மகாலில் நேற்று மாலை கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மளிகை கடைக்காரர்கள், ஓட்டல் உரிமையாளர்கள் மேற்கொள்ள வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. சூரமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தெய்வசிகாமணி தலைமை தாங்கி பேசும்போது, கொரோனா வைரஸ் தொற்று மிகவும் கொடுமையானது. நோய் பரவலை தடுக்க மளிகை கடைக்காரர்களும், ஓட்டல் உரிமையாளர்களும் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். அதாவது, மளிகை மற்றும் ஓட்டல்களுக்கு வரும் வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். மேலும், முககவசம் அணிந்து வர வேண்டும் என்று அறிவுறுத்த வேண்டும். கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மளிகை மற்றும் ஓட்டல் உரிமையாளர்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம், என்றார்.

மேலும் செய்திகள்