தமிழ் புத்தாண்டையொட்டி கோவில்களில் சிறப்பு அபிஷேகம்; ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்

தமிழ் புத்தாண்டையொட்டி கோவில்களில் சிறப்பு அபிஷேகம் நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2021-04-15 10:07 GMT
திருத்தணி முருகன் கோவில்
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோவிலில் தமிழ் புத்தாண்டையொட்டி நேற்று அதிகாலை மூலவருக்கு சுகந்த திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதன் பிறகு முருகனுக்கு தங்க கவசம், தங்க வேல் போன்றவற்றால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் சாமிக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. அதன் பிறகு வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டது.  இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பெரியபாளையம்
பெரியபாளையத்தில் உள்ள பவானி அம்மன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் நேற்று காலை முதல் சமூக இடைவெளியுடன் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டு, கைகளில் சானிடைசர் தெளிக்கப்பட்டு, முக கவசம் சமூக இடைவெளியுடன் கோவிலுக்குள் அனுமதித்தனர்.

மேலும், ராள்ளபாடியில் உள்ள சாய்பாபா கோவிலில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்