கொரோனா ஊரடங்கு அச்சம் காரணமாக கருங்கல்பாளையம் சந்தைக்கு வியாபாரிகள் வருகை குறைந்தது

கொரோனா ஊரடங்கு அச்சம் காரணமாக ஈரோடு கருங்கல்பாளையம் மாட்டு சந்தைக்கு வியாபாரிகள் வருகை குறைந்தது.

Update: 2021-04-16 21:34 GMT
ஈரோடு
கொரோனா ஊரடங்கு அச்சம் காரணமாக ஈரோடு கருங்கல்பாளையம் மாட்டு சந்தைக்கு வியாபாரிகள் வருகை குறைந்தது.
கன்று குட்டிகள்
ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியில் புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமைகளில் மாட்டுச்சந்தை நடந்து வருகிறது. அதன்படி புதன்கிழமை நடந்த சந்தைக்கு 100 கன்று குட்டிகளை விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். இந்த கன்றுக்குட்டிகள் குறைந்தபட்சமாக ரூ.10 ஆயிரத்துக்கும், அதிகபட்சமாக ரூ.15 ஆயிரத்துக்கும் விற்பனையானது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் வழக்கமான சந்தை கூடியது. இந்த சந்தைக்கு ஈரோடு, கரூர், நாமக்கல், திருவண்ணாமலை, கோவை, திருச்சி, சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தங்களது மாடுகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
கொரோனா ஊரடங்கு
300 பசு மாடுகளும், 200 எருமை மாடுகளும் என மொத்தம் 500 மாடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன. இதில் பசுமாடு ஒன்று குறைந்தபட்சமாக ரூ.30 ஆயிரத்துக்கும், அதிகபட்சமாக ரூ.60 ஆயிரத்துக்கும் விற்பனை ஆனது. எருமை மாடு ஒன்று குறைந்தபட்சமாக ரூ.30 ஆயிரத்துக்கும், அதிகபட்சமாக ரூ.50 ஆயிரத்துக்கு விற்பனை ஆனது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த வியாபாரிகளும், கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களை சேர்ந்த வியாபாரிகளும் விவசாயிகளிடம் நேரடியாக விலைபேசி மாடுகளை பிடித்து வாகனங்களில் ஏற்றிச் சென்றனர்.
இதுகுறித்து நிர்வாகிகள் கூறும்போது, ‘கொரோனா ஊரடங்கு எந்த நேரத்திலும் அறிவிக்க வாய்ப்புள்ளதால் வெளிமாநில வியாபாரிகள் மாட்டுச்சந்தைக்கு வர தயக்கம் காட்டுகிறார்கள். இதன் காரணமாக இன்று (அதாவது நேற்று முன்தினம்) வெளிமாநில வியாபாரிகள் குறைவாகவே வந்திருந்தனர். இதனால் மாடுகள் விற்பனை மந்தமாக இருந்தது' என்றனர்.

மேலும் செய்திகள்