12 லட்சம் பேர் தடுப்பூசி போட்டுள்ளனர் சென்னையில் தினசரி 25 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை

சென்னையை பொறுத்தவரை கடந்த சில நாட்களாக 2,400 என்ற எண்ணிக்கையில் கொரோனா பாதிப்பு இருந்து வருகிறது.

Update: 2021-04-17 20:20 GMT
சென்னை, 

பெருநகர சென்னை மாநகராட்சி வளசரவாக்கம் மண்டலம் போரூரில் உள்ள நகரப்புற சமுதாய நல ஆஸ்பத்திரியில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் பணியினை மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் நேற்று ஆய்வு செய்தார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

சென்னையை பொறுத்தவரை கடந்த சில நாட்களாக 2,400 என்ற எண்ணிக்கையில் கொரோனா பாதிப்பு இருந்து வருகிறது. கடந்த ஆண்டை காட்டிலும், தற்போது பாதிப்பு அதிகமாகவே இருக்கிறது. கொரோனா 2-வது அலையை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

தற்போது சென்னையில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட்டுள்ளது. தினசரி 20 ஆயிரம் பரிசோதனை செய்யப்படுகிறது. இதனை 25 ஆயிரமாக்குவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 45 வயதுக்கு மேற்பட்ட பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். சென்னையில் இதுவரை 12 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின் போது இணை கமிஷனர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் உள்பட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்