விபத்தில் சிறுமி பலியான வழக்கில் சரக்கு வேன் டிரைவருக்கு ஓராண்டு சிறை தண்டனை

விபத்தில் சிறுமி பலியான வழக்கில் சரக்கு வேன் டிரைவருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து குளித்தலை நீதிமன்றம் தீர்ப்பு கூறியது.

Update: 2021-04-19 19:02 GMT
குளித்தலை
சிறுமி பலி
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள வை.புதூரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவரது மகள் நிஷா (வயது 3). இந்தநிலையில் கடந்த 2017-ம் ஆண்டு சிறுமி தனது வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது, அந்த வழியாக சென்ற சரக்கு வேன் ஒன்று நிஷா மீது மோதியது. 
இதில் படுகாயமடைந்த நிஷா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து, குளித்தலை குற்றவியல் நீதிமன்றம் எண் 2-ல் வழக்கு தொடர்ந்தனர். 
டிரைவருக்கு ஓராண்டு சிறை
இதையடுத்து வழக்கு விசாரணை முழுவதும் முடிவடைந்த நிலையில் வழக்கை விசாரித்து வந்த நீதிபதி பாக்கியராஜ் நேற்று தீர்ப்பு கூறினார். இதில், சரக்கு வேனின் டிரைவர் திருச்சி மாவட்டம் கொளக்குடி அருகே உள்ள அப்பநல்லூர் பகுதியை சேர்ந்த நேருஜீ (27) என்பவருக்கு ஓராண்டு சிறை தண்டனையும், ரூ.4 ஆயிரம் அபராதமும், அபராதத்தொகையை கட்ட தவறினால் மேலும் 3 மாதங்கள் சிறைதண்டனையும் விதித்து தீர்ப்பு கூறினார். இதையடுத்து நேருஜீ சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் செய்திகள்