சந்தான மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

சந்தானமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.

Update: 2021-04-25 15:34 GMT
ஸ்ரீவைகுண்டம்:
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கீழ ஆழ்வார்த்தோப்பு கட்டயம்புதூர்  சந்தனமாரியம்மன் கோவிலில் மஹா கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு ஏப்.24ந்தேதி காலை 5மணிக்கு மங்கள இசை, தெய்வ அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜை, புண்ணியாவாஜனம், எஜமானர் வர்ணம், மஹா கணபதி ஹோமம், மகா லெட்சுமி ஹோமம், சுதர்சன ஹோமம், நவக்கிரகஹோமம், மிருத்யுஞ்ச தன்வந்திரி ஹோமம், கன்னிகா பூஜை, பூர்ணாஹூதி, தீபாராதனைகள் நடந்தது. ஏப்.25-ந் தேதி காலை 8 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜை ஆரம்பம், மங்கள இசை, விஷேச சாந்தி, தோரண பூஜை, வேதிகா அர்ச்சனை, யஸக வேள்வி, ரக்ஷாபந்தனம், நாடிசந்தானம், ஸ்பர்சாஹூதி, விஷேச திரவ்யாஹூதி, மஹாபூர்ணா ஹூதி, யாத்ராதானம், கிரஹப்ரிதி கும்பம் புறப்படுதல் நிகழ்ச்சியும், பகல் 12 மணிக்கு கோவில் கோபுரத்திற்கு புனித நீர் ஊற்றி சிறப்பு பூஜைகள் செய்து கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழா நாட்களில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்