ஸ்டெர்லைட் ஆலையை திறக்க எதிர்ப்பு: துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் குடும்பத்தினர் திடீர் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்கு சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்து உள்ளது. இதற்கு ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கத்தினர், பல்வேறு கிராமமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

Update: 2021-04-30 03:10 GMT
தூத்துக்குடி, 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்கு சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்து உள்ளது. இதற்கு ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கத்தினர், பல்வேறு கிராமமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது நடந்த துப்பாக்கி சூட்டில் பலியானவர்கள், படுகாயம் அடைந்தவர்களின் உறவினர்கள் நேற்று காலை கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். அவர்கள் இறந்தவர்களின் உருவப்படங்களை கைகளில் ஏந்தி வந்தனர்.

தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பி திடீரென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிலர், கலெக்டர் செந்தில்ராஜை சந்தித்து மனு கொடுத்தனர். 

மேலும் செய்திகள்