கொரோனா பரவலை தடுக்க நாமக்கல்லில் இறைச்சி, மீன் கடைகள் மூடல்

கொரோனா பரவலை தடுக்க நாமக்கல்லில் இறைச்சி, மீன் கடைகள் மூடப்பட்டன.

Update: 2021-05-01 21:44 GMT
நாமக்கல்:
தமிழகத்தில் கொரோனாவின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதை தடுக்க அரசும், சுகாதாரத்துறையும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக நகராட்சி பகுதிகளில் 3 ஆயிரம் சதுர அடிக்கு மேல் உள்ள பெரிய கடைகள், சலூன்கடைகள் மூடப்பட்டு உள்ளன. மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பதால் முந்தைய நாளான சனிக்கிழமையில் இறைச்சி மற்றும் மீன் கடைகளில் கூட்டம் அலைமோதுவதை பார்க்க முடிந்தது. இதையடுத்து தமிழக அரசு கொரோனா பரவலை தடுக்க சனிக்கிழமைகளிலும் இறைச்சி மற்றும் மீன்கடைகளை மூட உத்தரவிட்டு உள்ளது. அதன்படி நேற்று நாமக்கல் நகரில் சேந்தமங்கலம் சாலை, திருச்சி சாலை, கோட்டைசாலை பகுதிகளில் உள்ள மீன் மற்றும் இறைச்சி கடைகள் மூடப்பட்டு இருந்தன. இதனால் அசைவ பிரியர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

மேலும் செய்திகள்