கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா நிறைவு

கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா நிறைவு

Update: 2021-05-03 01:14 GMT
அழகர்கோவில்
மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 23-ந் தேதி தொடங்கியது. பின்னர் தினமும் எதிர் சேவை, கள்ளழகர் திருக்கோலம், குதிரை வாகனத்தில் எழுந்தருளிய சுவாமிக்கு ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலை அணிவித்தல், நந்தவனஆடி வீதியில் அமைக்கப்பட்டிருந்த மாதிரி வைகை ஆற்றில் சுவாமி எழுந்தருளல், சேஷ, கருட வாகன சேவை, புராணம் வாசித்தல், மண்டூக மகரிஷிக்கு மோட்சம் அளித்தல், பூப்பல்லக்கு, மற்றும் அர்த்த மண்டப சேவை நடந்தது. விழாவில் நேற்று காலையில் கள்ளழகர் பெருமாளுக்கு உற்சவ சாந்தி, திருமஞ்சனமும் நடந்தது. இந்த திரு விழாக்கள் அத்தனையும் கோவில் வளாகத்திலேயே பக்தர்கள் அனுமதி இன்றி நடந்தது. இதில் கோவில் பணியாளர்கள், பட்டாச்சாரியார்கள் மட்டும் கலந்து கொண்டனர். இத்துடன் திருவிழா நிறைவு பெற்றது. இதற்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி அனிதா மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்