பரமத்திவேலூர் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் சேகர் வெற்றி கே.எஸ்.மூர்த்தி எம்.எல்.ஏ.வை வீழ்த்தினார்

பரமத்திவேலூர் சட்டசபை தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் சேகர் வெற்றி பெற்றார்.

Update: 2021-05-03 16:51 GMT
நாமக்கல், 

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தொகுதியில் தி.மு.க. சார்பில் கே.எஸ்.மூர்த்தி எம்.எல்.ஏ. போட்டியிட்டார். அவரை எதிர்த்து அ.தி.மு.க. சார்பில் சேகர் மற்றும் மக்கள் நீதி மய்யம், அ.ம.மு.க., நாம் தமிழர் கட்சியை ேசர்ந்தவர்களும் களம் கண்டனர்.

இந்தநிலையில் நேற்று தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டது. இதில் அ.தி.மு.க. வேட்பாளர் சேகர் 86,034 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ேக.எஸ்.மூர்த்தி எம்.எல்.ஏ. 78,372 வாக்குகளை பெற்றார்.

சான்றிதழ்

பரமத்திவேலூர் தொகுதியில் பதிவான வாக்குகளின் விவரம் வருமாறு:-

மொத்த ஓட்டுகள்- 2,21,602

பதிவானவை- 1,83,733

கே.எஸ்.மூர்த்தி (தி.மு.க.)- 78,372

எஸ்.சேகர் (அ.தி.மு.க.)- 86,034

பி.பி.சாமிநாதன் (அ.ம.மு.க.) - 1,329

நடராஜன் (மக்கள் நீதி மய்யம்) - 1,882

யுவராணி (நாம் தமிழர் கட்சி- 11,684

நோட்டா - 964.

இதற்கிடையே வெற்றி பெற்றதற்கான சான்றிதழை தேர்தல் நடத்தும் அலுவலர் மோகனசுந்தரம் வழங்கினார்.

மேலும் செய்திகள்