நெல்லையில் கேரட் விலை திடீர் வீழ்ச்சி ஒரு கிலோ ரூ.10-க்கு விற்பனை

நெல்லையில் கேரட் விலை திடீரென்று வீழ்ச்சி அடைந்தது. ஒரு கிலோ ரூ.10-க்கு விற்பனை செய்யப்பட்டது.

Update: 2021-05-03 18:16 GMT
நெல்லை:
நெல்லையில் கேரட் விலை திடீரென்று வீழ்ச்சி அடைந்தது. ஒரு கிலோ ரூ.10-க்கு விற்பனையானது.

வரத்து அதிகரிப்பு

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பிற மாநிலங்களில் இருந்தும் நெல்லைக்கு காய்கறிகள் கொண்டு வந்து விற்பனை செய்யப்படுகிறது. நெல்லை டவுனில் உள்ள நயினார்குளம் மொத்த மார்க்கெட்டுக்கு காய்கறிகள் கொண்டு வரப்பட்டு ஏலம் விடப்படுகிறது.  அங்கிருந்து சில்லறை வியாபாரிகள் வாங்கிச் சென்று பொதுமக்களுக்கு விற்பனை செய்கிறார்கள்.

இவ்வாறு கேரட், பீன்ஸ், முள்ளங்கி போன்ற காய்கறிகள் ஊட்டி உள்ளிட்ட மலைப்பகுதிகளில் அறுவடை செய்யப்பட்டு பல்வேறு இடங்களுக்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகிறது. அந்த வகையில் கேரட் அறுவடை தற்போது அதிக அளவு நடப்பதாக தெரிகிறது. இதனால் அதிக அளவு கேரட் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் காரணமாக கேரட் விலை திடீரென்று வீழ்ச்சி அடைந்து உள்ளது. 

ரூ.10-க்கு விற்பனை

நெல்லை டவுன் சந்தி பிள்ளையார் கோவில் அருகில் தள்ளுவண்டியில் வியாபாரிகள் கேரட் குவித்து வைத்து விற்பனை செய்கிறார். அங்கு ஒரு கிலோ ரூ.10-க்கு  விற்பனை செய்யப்படுகிறது.  வரத்து அதிகரிப்பால் விலை குறைந்து உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். 

அதேநேரத்தில் நேற்று பிற்பகலில் மார்க்கெட்டில் ஏலம் நடைபெற்றபோது கேரட் விலை ரூ.30 வரை ஏலம் போனது.

மேலும் செய்திகள்