கலவை அருகே கொரோனா நோயாளிகள் சாலை மறியல்

கலவை அருகே கொரோனா நோயாளிகள் சாலை மறியல்

Update: 2021-05-04 15:04 GMT
கலவை

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அருகே உள்ள தனியார் கல்லூரியில் கொரோனா சிகிச்சை மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இங்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் உள்பட 108 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். கடந்த மாதம் 26-ந் தேதி இங்கு கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவுகள் புகை நாற்றம் வீசுகிறது, இட்லி புளிப்பாக உள்ளது, டீ குடிக்க பேப்பர் கப் கொடுப்பதில்லை, குழந்தைக்கு பால் கொடுப்பதில்லை, கழிவறைகள் சுத்தம் செய்யவில்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி கல்லூரி வளாகத்துக்குள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் உணவு பொருட்கள் தரமாக இல்லை, கழிவறைகள் சுத்தம் செய்யவில்லை என கூறி திடீரென கொரோனா நோயாளிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த கலவை சப்-இன்ஸ்பெக்டர் சரவணமூர்த்தி மற்றும் அதிகாரிகள் சென்று கொரோனா நோயாளிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை சமாதானம் செய்தனர். அதைத்தொடர்ந்து அவர்கள் மீண்டும் சிகிச்சை மையத்துக்கு சென்றனர்.

மேலும் செய்திகள்