கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரே நாளில் 310 பேருக்கு கொரோனா

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 310 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2021-05-05 17:35 GMT
கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம பர்கூர் பகுதியை சேர்ந்த 38 வயது நபர் ஒருவருக்கு கடந்த ஏப்ரல் மாதம் 22-ந் தேதி கொரோனா உறுதிப்படுத்தப்பட்டு, சேலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் கடும் மூச்சுத்திணறல் காரணமாக அவா் கடந்த 2-ந் தேதி உயிரிழந்தார். 
அதே நாளில் 60 மற்றும் 65 வயது முதியவர்கள், கிருஷ்ணகிரியை சேர்ந்த 50 வயது ஆண், பெண் என இருவர் உள்பட 5 பேர் உயிரிழந்தனர். இதனால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 138 ஆக உயர்ந்துள்ளது. 
சிகிச்சை
மேலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 310 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 576 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மாவட்டத்தில் மொத்தம் இதுவரை 16 ஆயிரத்து 525 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 
இதில் சிகிச்சையில் குணமடைந்து 13 ஆயிரத்து 768 பேர் வீடு திரும்பி உள்ளனர். தற்போது 2 ஆயிரத்து 619 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை சிகிச்சை பலனின்றி இறந்தவர்களின் எண்ணிக்கை 138 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
=======

மேலும் செய்திகள்