விக்கிரமசிங்கபுரம் அருகே சிறுத்தை மீண்டும் அட்டகாசம் ஆட்டை கடித்து தூக்கிச் சென்றது

விக்கிரமசிங்கபுரம் அருகே சிறுத்தை மீண்டும் அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளது. ஆட்டை கடித்து தூக்கிச் சென்றது.

Update: 2021-05-05 19:24 GMT
விக்கிரமசிங்கபுரம்:
விக்கிரமசிங்கபுரம் அருகே சிறுத்தை மீண்டும் அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளது. ஆட்டை கடித்து தூக்கிச் சென்றது.

சிறுத்தை அட்டகாசம்

நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகே வேம்பையாபுரம் காலணி தெருவை சேர்ந்தவர் பாண்டிதுரை (வயது 25). இவர் தனது வீட்டில் கொட்டகை அமைத்து ஆடு, மாடுகளை வளர்த்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் இவரது கொட்டகைக்குள் நுழைந்த சிறுத்தை ஒன்று அங்கிருந்த ஆட்டை தூக்கி சென்றது. திடீரென இரவு நேரத்தில் ஆட்டின் சத்தம் தொடர்ந்து கேட்க வீட்டில் இருந்தவர்கள் வெளியே வந்து பார்த்தனர்.

அப்போது அங்கு கயிற்றில் கட்டி போட்டிருந்த ஆடு காணாமல் போனது தெரியவந்தது. இதுபற்றி பாபநாசம் வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

கூண்டு வைத்து பிடிக்க கோரிக்கை

இதில் வேம்பையாபுரம் கிராமத்தை ஒட்டியுள்ள வனப்பகுதியில் இருந்து வந்த சிறுத்தை ஒன்று ஆட்டை கடித்து வனப்பகுதிக்குள் தூக்கி சென்றது தெரிய வந்தது. 

வனப்பகுதியில் இருந்து கிராமத்திற்குள் நுழைந்த சிறுத்தையை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று வேம்பையாபுரம் மக்கள் வனத்துறையினரிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் செய்திகள்