விதிமுறைகளை மீறி கடைவீதியில் கூடினால் அபராதம்; அதிகாரிகள் எச்சரிக்கை

ஊரடங்கு நாட்களில் விதிமுறைகளை மீறி கடைவீதியில் கூட்டம் கூடுவதை தவிர்க்க பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2021-05-09 20:51 GMT
ஜெயங்கொண்டம்:
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசு அறிவிப்பின்படி தமிழகம் முழுவதும் இன்று(திங்கட்கிழமை) முதல் வருகிற 24-ந் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இருப்பினும் அத்தியாவசிய பொருட்களான காய்கறி, மளிகை பொருட்கள் மற்றும் இறைச்சி கடைகள் முழு ஊரடங்கு நாட்களிலும் தினமும் மதியம் 12 மணி வரை செயல்படும். எனவே ஜெயங்கொண்டம் கடைவீதிகளில் பொதுமக்கள் அவசரப்பட்டு கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும். மீறினால் தனிநபருக்கு 200 ரூபாயும், கடைகளுக்கு 5 ஆயிரம் ரூபாயும் என அபராதம் விதித்து வசூலிக்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்