தேனி மாவட்டத்தில் 6 பேரின் உயிரை பறித்த கொரோனா

தேனி மாவட்டத்தில் 6 பேரின் உயிரை கொரோனா பறித்தது. புதிதாக 491 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டது.

Update: 2021-05-10 17:15 GMT
தேனி:
தேனி மாவட்டத்தில் கொரோனா வைரசின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இந்த தொற்றுக்கு பலியானோரின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. 
இந்தநிலையில் கொரோனா பாதிப்புடன் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போடியை சேர்ந்த 38 வயது ஆண், டி.கள்ளிப்பட்டியை சேர்ந்த 61 வயது மூதாட்டி ஆகிய 2 பேரும் நேற்று முன்தினம் உயிரிழந்தனர். இதேபோல் மேல்மங்கலத்தை சேர்ந்த 51 வயது ஆண், அனுமந்தன்பட்டியை சேர்ந்த 62 வயது முதியவர், தேனி என்.ஆர்.டி. நகரை சேர்ந்த 53 வயது ஆண், ஜி.ரெங்கபுரத்தை சேர்ந்த 53 வயது பெண் ஆகிய 4 பேரும் கொரோனா பாதிப்புடன் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். 
இந்தநிலையில் அவர்கள் 4 பேரும் நேற்று ஒரேநாளில் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
இதற்கிடையே மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் 491 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியானது. இதனால் மாவட்டத்தில் இந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24 ஆயிரத்து 171 ஆக உயர்ந்தது. 

மேலும் செய்திகள்