முதல்-அமைச்சருடன் சந்திப்பு: ஊரடங்கு காரணமாக கொரோனா தொற்று வேகமாக குறையும்; டாக்டர் ரேலா கருத்து

ஊரடங்கு காரணமாக கொரோனா தொற்று வேகமாக குறையும் என்று மு.க.ஸ்டாலினை சந்தித்த பிறகு டாக்டர் ரேலா தெரிவித்தார்.

Update: 2021-05-11 10:31 GMT
சந்திப்பு
தமிழகத்தில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. பல மருத்துவ வல்லுனர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்திய பிறகு, கொரோனா சங்கிலி தொடரை அறுத்தெறிய ஊரடங்கை தமிழக அரசு அமல்படுத்தியுள்ளது. இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள், டாக்டர்கள் என பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

எஸ்.ஜெகத்ரட்சகன் எம்.பி. நிறுவிய ரேலா ஆஸ்பத்திரி தலைவரும், கல்லீரல் அறுவை சிகிச்சை நிபுணருமான டாக்டர் முகமது ரேலா, ஆஸ்பத்திரி தலைமை செயல் அதிகாரி டாக்டர் இளங்குமரன் கலியமூர்த்தி ஆகியோர் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனர்.

வெகுவாக குறையும்....
இது குறித்து டாக்டர் முகமது ரேலா கூறும்போது, “தமிழக அரசு அமைத்துள்ள கொரோனா கட்டளை மையம் வரவேற்கத்தக்கது. இது ஏராளமான நோயாளிகளுக்கு பலன் அளிக்கும். முதல்-அமைச்சர் அறிவித்துள்ள ஊரடங்கை வரவேற்கிறோம். இதன் காரணமாக தொற்றின் வேகம் குறையும். அடுத்த சில வாரங்களில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைய வாய்ப்புள்ளது”என்றார்.

மேலும் செய்திகள்