க.பரமத்தி அருகே மொபட் மீது லாரி மோதி பள்ளி மாணவி பலி லாரியை பொதுமக்கள் சிறைபிடிப்பு

க.பரமத்தி அருகே மொபட் மீது லாரி மோதி பள்ளி மாணவி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அந்த லாரியை பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-05-13 17:45 GMT
க.பரமத்தி
பள்ளி மாணவி பலி
கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே உள்ள பவுத்திரம் பாரதிநகர் காலனியை சேர்ந்த ெரங்கசாமி. இவரது மகள் ஹர்ஷனா (வயது 14). இவர் அங்குள்ள உயர்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.  இந்தநிலையில் நேற்று முன்தினம் காலை ஹர்ஷனா ஒரு மொபட்டில் தனது வீட்டில் உள்ள பாலை பவுத்திரத்திலுள்ள கூட்டுறவு பால் சொசைட்டிக்கு சென்று ஊற்றி விட்டு வீட்டிற்கு அதே மொபட்டில் வந்து கொண்டிருந்தார். 
முனியப்பன் கோவில் அருகே வந்தபோது எதிரே வந்த டிப்பர் லாரி ஒன்று மொபட் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் மொபட்டில் இருந்து தூக்கி வீசப்பட்ட மாணவி ஹர்ஷனா சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பரிதாபமாக இறந்தார். 
சிறை பிடிப்பு
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் விபத்தை ஏற்படுத்திய லாரியை சிறைபிடித்தனர். இதுகுறித் தகவல் அறிந்த க.பரமத்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமாதேவி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து லாரியை சிறைபிடித்து போராட்டத் தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவாார்த்தை நடத்தினர். அப்போது உடனடியாக சாலை விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவரை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். 
டிரைவர் கைது
இதையடுத்து போலீசார் லாரி டிரைவர் பவுத்திரம் குரும்பபட்டியை சேர்ந்த விஸ்வநாதன் மகன் பாலசுப்பிரமணி (26) என்பவரை கைது செய்தனர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
பின்னர் போலீசார் ஹர்ஷனாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் செய்திகள்