தோகைமலை அருகே நாகம்மாள் கோவில் உண்டியலை உடைத்து பணம்

தோகைமலை அருகே நாகம்மாள் கோவில் உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2021-05-17 17:26 GMT
தோகைமலை
நாகம்மாள் கோவில்
கரூர் மாவட்டம், தோகைமலை அருகே வடசேரி பெரியகுளத்தில் மேற்கு பகுதியில் பிரசித்தி பெற்ற நாகம்மாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் பரிவார தெய்வங்களுடன் உள்ளடக்கிய சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது அதிவேகமாக கொரோனா தொற்று பரவி வருவதால் கோவிலுக்கு கோவிலுக்கு பக்தர்கள் வருவதில்லை. 
இதனால் தினமும் அதிகாலை நேரத்தில் கோவில் பூசாரி கருணாகரன் மட்டும் கோவிலை திறந்து பூஜைகள் செய்து விட்டு அடைத்து செல்வார். இந்நிலையில் நேற்று முன்தினம் பூஜை செய்து கோவில் பூசாரி கருணாகரன் கோவிலை பூட்டிவிட்டு இரவு வீட்டுக்கு சென்று உள்ளார். நேற்று அதிகாலை பூசாரி வழக்கம்போல் கோவிலுக்கு வந்தார். அப்போது கோவில் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. 
பணம் கொள்ளை
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கோவிலுக்குள் சென்று பார்த்தார். அப்போது கோவில் மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணத்தை மர்மநபர்களை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. 
இதுகுறித்து ஊர்பொதுமக்கள் தோகைமலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் தோகைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்