22 ஆயிரம் வீடுகளில் காய்ச்சல் பரிசோதனை

பொள்ளாச்சியில் கொரோனா பரவலை தடுக்க 22 ஆயிரம் வீடுகளில் உள்ளவர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்து உள்ளதாக நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Update: 2021-05-17 18:13 GMT
பொள்ளாச்சி

பொள்ளாச்சியில் கொரோனா பரவலை தடுக்க 22 ஆயிரம் வீடுகளில் உள்ளவர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்து உள்ளதாக நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

காய்ச்சல் பரிசோதனை

பொள்ளாச்சி பகுதியில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. மேலும் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. எனவே தொற்று பாதிப்பை கட்டுப்படுத்த நகராட்சி ஆணையாளர் காந்திராஜ் உத்தரவின் பேரில் நகர்நல அலுவலர் டாக்டர் ராம்குமார் மேற்பார்வையில் நகர பகுதியில் வசிக்கும் மக்களுக்கு வீடு, வீடாக சென்று காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப் பட்டு வருகிறது. 

தெர்மல் ஸ்கேனர் மூலம் பொதுமக்களின் உடல்வெப்பநிலை கண்டறியப்படுகிறது. அப்போது யாருக்காவது காய்ச்சல் பாதிப்பு இருந்தால் உடனே அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்று கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. 

இந்த பணியில் சுகாதார ஆய்வாளர்கள் தர்மராஜ், சிவக்குமார், சேகர், செந்தில், ஆறுமுகம், ஜெயபாரதி மற்றும் மேற்பார்வையாளர்கள், சுகாதாரத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். 

இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-

22 ஆயிரம் வீடுகள் 

பொள்ளாச்சி நகரில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் வசிக்கும் மக்களுக்கு சத்து மாத்திரைகள், கிருமி நாசினி பவுடர், கபசுர குடிநீர் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. 

மேலும் வீடு, வீடாக சென்று காய்ச்சல் பாதிப்பு உள்ளதா? என்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக 28 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. முதற்கட்டமாக காய்ச்சல் பரிசோதனை செய்து முடிக்கப்பட்டு தற்போது 2-ம் கட்டமாக பரிசோதனை செய்யப்படுகிறது. 

அந்த வகையில் இதுவரை 22 ஆயிரம் வீடுகளில் உள்ளவர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்