17 போலீஸ் நிலையங்களில் பணி புரியும் போலீசாருக்கு கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள்

17 போலீஸ் நிலையங்களில் பணி புரியும் போலீசாருக்கு கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனா வழங்கினார்.

Update: 2021-05-18 15:37 GMT
நாகப்பட்டினம்,

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க வருகிற 24-ந்தேதியில் வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. . இதனை நடைமுறைப்படுத்த நாகை மாவட்ட போலீஸ் துறையினர், சாலைகளில் இரும்பு தடுப்புகள் அமைத்து வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். விதிகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இவ்வாறு பணிகளில் ஈடுபடும் போலீசாருக்கு நோய் தொற்று ஏற்படாமல் இருக்க முக கவசம், கிருமி நாசினி போன்ற பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி நாகை மாவட்டத்தில் உள்ள 17 போலீஸ் நிலையங்களில் இருந்து ஒரு போலீசார் நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்தனர். அவர்களிடம் அந்தந்த போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் போலீசாருக்கு பாதுகாப்பு உபகரணங்களை போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனா வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி, சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆனந்தராஜ், இனியவன் ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்