சீர்காழி பகுதியில் கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்த சாலையோர வியாபாரிகள் நிவாரணம் வழங்க வலியுறுத்தல்

சீர்காழி பகுதியில் கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்த சாலையோர வியாபாரிகள் நிவாரணம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

Update: 2021-05-18 16:14 GMT
சீர்காழி,

தமிழகத்தில் ெகாரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை தடு்க்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கை அமல்படுத்தி உள்ளது. அதன்படி சீர்காழி மற்றும் வைத்தீஸ்வரன் கோவில் ஆகிய பகுதிகளில் அத்தியாவசிய கடைகள் தவிர மற்ற கடைகள் காலை 6 மணி முதல் 10 மணிவரை திறக்கப்பட்டு அடைக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் சீர்காழி, வைத்தீஸ்வரன் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட சாலையோர பழக்கடைகள், இளநீர், தர்பூசணி, பனைநுங்கு வியாபாரிகள் பழங்களை விற்பனை செய்து வருகின்றனர்.

தற்ேபாது கொரோனா ஊரடங்கால் சாலையோர வியாபாரிகள் மற்றும் பழ வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு தங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்து வருகின்றனர்.

அழுகி வீணாகி வருகிறது

வெயில் காலத்தையொட்டி வியாபாரிகள் வெளி மாவட்டத்தில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் தர்பூசணி, கிர்ணிபழம், சாத்துக்குடி, ஆரஞ்சு, திராட்சை உள்ளிட்ட பழங்களை கொள்முதல் செய்து, தற்போது ஊரடங்கால் விற்பனை செய்ய முடியாமல் பழங்கள் அனைத்தும் அழுகி வீணாகி வருகிறது. இதனால் வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

நிவாரணம்

இதுகுறித்து சாலையோர வியாபாரி ஒருவர் கூறுகையில்,

சீர்காழி பகுதியில் சாலையோரம் பழங்களை விற்பனை செய்யும் வியாபாரிகள் ஏழ்மை நிலையில் உள்ளவர்கள். தற்போது வட்டிக்கு பணம் வாங்கியும், நகைகளை அடகு வைத்தும் வெளி மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் பழங்களை கொள்முதல் செய்து, விற்பனை செய்ய முடியாமல் பழங்கள் அழுகி வீணாகி வருகிறது. இதனால் எங்களுடைய வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதே நிலை தொடர்ந்தால் தற்கொலைதான் செய்து கொள்ள வேண்டும். எனவே அரசு சாலையோர வியாபாரிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றார்.

மேலும் செய்திகள்