திருவண்ணாமலையில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

திருவண்ணாமலையில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2021-05-18 17:51 GMT
திருவண்ணாமலை

திருவண்ணாமலை-செங்கம் சாலை கிரிவலப்பாதையில் அரசு ஊழியர்கள் குடியிருப்பு வளாகம் உள்ளது. 250-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு கடந்த 5 நாட்களாக சரிவர தண்ணீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். மேலும் அந்த வளாகத்தில் உள்ள சில மின்விளக்குகளும் எரியவில்லை. 

இதுகுறித்து திருவண்ணாமலை நகராட்சி அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து லாரியில் தண்ணீர் வழங்கப்பட்டது. ஆனால் கழிவுநீர் கலந்தது போன்று அச்சுத்தமாக இருந்துள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் உடனடியாக குடிநீர் வசதி செய்து தரக்கோரி நேற்று மாலை காலிக்குடங்களுடன் பேரிகார்டுகள் மூலம் சாலையை மறித்து மறியலில் ஈடுபட்டனர். 

இதுகுறித்து தகவலறிந்த திருவண்ணாமலை டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். 

அதைத் தொடர்ந்து அவர்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்