கீழக்கரையில் டிரோன் மூலம் கண்காணிப்பு

கீழக்கரையில் டிரோன் மூலம் ஊரடங்கு கண்காணிக்கப்பட்டது.

Update: 2021-05-20 17:24 GMT
கீழக்கரை, 
தமிழகத்தில் கொரோனா தொற்று 2-வது அலை வேகமாக பரவி வருவதால் ஊரடங்கு அமல்படுத்தப் பட்டு உள்ளது. அதையொட்டி காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே மளிகைக்கடை, பால், மற்றும் காய்கறி கடைகள், இயங்க அரசு அனுமதி அளித்துள்ளது. இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு சிலர் இரு சக்கர வாகனங்களில் சாலைகளில் தேவையில்லாமல் சுற்றித் திரிகின்றனர். மேலும் கீழக்கரையில் உள்ள வடக்கு தெரு, தெற்கு தெரு, கிழக்குத்தெரு, சின்னக்கடை தெரு போன்ற தெருக்களில் சிலர் கூட்டம் கூட்டமாக ஒரே இடத்தில் நின்றுகொண்டு கிரிக்கெட், கைப்பந்து, கால்பந்து விளையாடி வருகின்றனர். இதனால் கொரோனா தொற்று அதிகரிக்கும் நிலை இருந்து வருகிறது. இதனை கண்காணிக்கும் வகையில் ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில்  சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ், நகராட்சி கமிஷனர் பொறுப்பு பூபதி, மெட்ரிக்ஸ் மீடியா ஆஷிக் ஆகியோர் முன்னிலையில் பொதுமக்களை டிரோன் கேமரா மூலம் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது தேவை இல்லாமல் வெளியில் சுற்றித்திரிந்த 6 இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்து முகக்கவசம் அணியாத 8 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்