தோட்டத்துக்குள் புகுந்து யானைகள் அட்டகாசம்

பூதப்பாண்டி அருகே தோட்டத்துக்குள் புகுந்து யானைகள் அட்டகாசம் செய்தன. வாழை, தென்னை மரங்களை பிடுங்கி எறிந்து நாசம் செய்தன. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-05-25 19:09 GMT
அழகியபாண்டியபுரம்:
பூதப்பாண்டி அருகே தோட்டத்துக்குள் புகுந்து யானைகள் அட்டகாசம் செய்தன. வாழை, தென்னை மரங்களை பிடுங்கி எறிந்து நாசம் செய்தன. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
யானைகள் அட்டகாசம்
பூதப்பாண்டி அருகே தாடகை மலை அடிவாரத்தில் உடையார் கோணம் பகுதி உள்ளது. இங்குள்ள தோவாளை சானல் அருகில் 5 ஏக்கர் பரப்பில் வாழை மற்றும் இஞ்சி, புடலங்காய் போன்ற பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன. இதில் 1½ ஏக்கர் பரப்பில் ரச கதலி வாழைகள் பயிரிடப்பட்டுள்ளன.
இந்த வாழைகள் பூக்கள் வந்தும், குலைகள் தள்ளிய நிலையிலும் நிற்கின்றன. நேற்று முன்தினம் இரவு தாடகை மலை பகுதியில் இருந்து வாழை தோட்டத்திற்குள் 3 யானைகள் புகுந்துள்ளன. பின்னர் வாழைகளை பிடுங்கி எறிந்தும், மிதித்தும் நாசம் செய்துள்ளன. இதில் 100-க்கும் மேற்பட்ட வாழைகள் சேதமடைந்துள்ளன.
வனத்துறையினர் விசாரணை
மேலும் அங்குள்ள தென்னந்தோப்புக்குள் புகுந்த யானைகள் 5-க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை வேரோடு பிடுங்கி எறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த விவசாயிகள், யானைகளை காட்டுக்குள் விரட்ட வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்த பூதப்பாண்டி வன சரக அலுவலர் திலீபன் உத்தரவின் பேரில் வன காவலர்கள் ஜான், மில்டன் உள்ளிட்ட வனத்துறையினர் விரைந்து வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். யானைகளால் வாைழ, தென்னை மரங்களை இழந்து நஷ்டத்தை சந்தித்துள்ள விவசாயிகளுக்கு தகுந்த நிவாரணம் வழங்க ேவண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

மேலும் செய்திகள்