2¼ லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி

திண்டுக்கல் மாவட்டத்தில் 2¼ லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

Update: 2021-05-28 14:48 GMT
திண்டுக்கல்: 

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி மாதம் தொடங்கியது. தொடக்கத்தில் முதியவர்கள் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. 

பின்னர் 45 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. இதற்காக சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டன. 

இதற்கிடையே கொரோனா பரவல் வேகமாக பரவியது. இதைத்தொடர்ந்து கொரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கையாக கடந்த ஒரு வாரமாக 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணி நடக்கிறது.

 இதையொட்டி திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகள், வட்டார மருத்துவமனைகள் மற்றும் சிறப்பு முகாம்களில் தடுப்பூசி போடப்படுகிறது.

 இதில் முன்கள பணியாளர்கள் உள்பட அனைவரும் ஆர்வமுடன் வந்து தடுப்பூசி போடுகின்றனர். அந்த வகையில் நேற்று ஒரே நாளில் மட்டும் 7 ஆயிரத்து 294 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். 

மேலும் மாவட்டம் முழுவதும் இதுவரை 2 லட்சத்து 21 ஆயிரத்து 332 பேர் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர். மேலும் தடுப்பூசி போடுவதற்கு முகாம்களை அதிகரிக்கவும் சுகாதாரத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்