கல்வராயன்மலையில் 3200 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு

கல்வராயன்மலையில் 3200 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு

Update: 2021-05-29 16:21 GMT
கச்சிராயப்பாளையம்

கச்சிராயப்பாளையம் அருகே கல்வராயன்மலையில் உள்ள தெற்குப்பட்டி வனப்பகுதியில் சாராய ஊறல் பதப்படுத்தி வைக்கப்பட்டிருப்பதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக்குக்கு ரகசிய தகவல் கிடைத்தது.  இதையடுத்து திருக்கோவிலூர் மதுவிலக்கு அமலாக்கபிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டியன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் அகிலன் மற்றும் போலீசார் கல்வராயன் மலையில் உள்ள தெற்குபட்டி வனப்பகுதியில் சாராய வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு 200 லிட்டர் கொள்ளளவுள்ள 16 பேரல்களில் 3,200 லிட்டர் சாராய ஊறலை பதப்படுத்தி பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்த போலீசார் அவற்றை தரையில் கொட்டி அழித்தனர். இது தொடர்பாக கல்வராயன்மலை தெற்குப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்