சம்பா பருவத்துக்காக 384 டன் விதை நெல் சுத்திகரிப்பு பணி தீவிரம்- மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சின்னசாமி ஆய்வு

சம்பா பருவத்துக்காக 384 டன் விதை நெல் சுத்திகரிப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த பணியை மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சின்னசாமி ஆய்வு செய்தார். ஆய்வு

Update: 2021-05-29 22:28 GMT
ஈரோடு
சம்பா பருவத்துக்காக 384 டன் விதை நெல் சுத்திகரிப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த பணியை மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சின்னசாமி ஆய்வு செய்தார். விவசாயம்
ஆய்வு
பவானி குருப்பநாயக்கன் பாளையத்தில் உள்ள அரசு விதை சுத்திகரிப்பு நிலையத்தில், சம்பா பருவத்துக்காக, 384 டன் விதை நெல் சுத்திகரிப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த பணி மற்றும் விதை இருப்பு, விதைகளின் நிலைகளை, ஈரோடு மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சி.சின்னசாமி ஆய்வு செய்தார். அதைத்தொடர்ந்து அவர் கூறியதாவது:-
முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையிலும், எதிர் வரும் சம்பா பருவத்துக்கான நெல் விதை தேவையை கருத்தில் கொண்டு, பவானி அரசு விதை சுத்திகரிப்பு நிலையத்தில், நெல் விதை சுத்திகரிப்பு பணி நடக்கிறது. அரசின் பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றப்பட்டு, தொடர்ந்து இயங்குகிறது.
384 டன் விதை நெல்
சம்பா பருவத்துக்கான நெல் ரகங்களான ஏ.டி.டி., 38, ஏ.டி.டி., 29, கோ (ஆர்) 50, ஐ.ஆர். 20, பி.பி.டி., 5204, மேம்பட்ட வெள்ளை பொன்னி, சம்பா சப்1, திருச்சி 3 உள்ளிட்ட வயல் மட்ட விதைகள் 384 டன் பெறப்பட்டு, அதில் 301 டன் விதைகளின் சுத்திகரிப்பு பணி நிறைவடைந்து உள்ளது. மீதமுள்ள வயல் மட்ட விதைகளின் சுத்திகரிப்பு பணி நடந்து வருகிறது. இந்த பணிகளை விரைந்து முடிக்க அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது.
பகுப்பாய்வு முடிவுகளில் தேர்ச்சி பெற்றுள்ள விதை குவியல்களை தாமதம் இன்றி சான்று அட்டை பொருத்தி, அந்தந்த வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களுக்கு மாறுதல் செய்யும் பணிகளையும் விரைவுபடுத்த தக்க ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம், கொரோனா முழு ஊரடங்கு காலத்திலும், வேளாண் பணிகள் தொய்வின்றி நடக்க ஏதுவாக உழவர்களுக்கு தரமான விதைகள் வழங்குவதை உறுதி செய்யும் பொருட்டு, அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்