தடையை மீறி இயங்கிய 3 இறைச்சி கடைகளுக்கு அபராதம்

தடையை மீறி இயங்கிய 3 இறைச்சி கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

Update: 2021-05-30 16:47 GMT
மலைக்கோட்டை, 

கொரோனா நோய்தொற்று காரணமாக தமிழகத்தில் கடந்த இரண்டு வாரங்களாக ஒரு சில தளர்வுகள் உடன் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்த நிலையில் கடந்த 25-ந்தேதி முதல் கறிக்கடைகள், மீன் கடைகளுக்கு அனுமதி கொடுக்கப்படவில்லை. இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் திருச்சி கோட்டை பகுதியில் உள்ள சந்து கடை மற்றும் இ.பி.ரோடு, தேவதானம் ெரயில்வே கேட் அருகே கடையை திறந்து ஆடு மற்றும் கோழி கறி விற்பனை செய்த மூன்று கடை உரிமையாளர்களை போலீசார் எச்சரித்து தலா 5 ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும் தமிழக அரசு கடையை திறக்க மீண்டும் உத்தரவு கொடுக்கும் வரை கடையை திறக்க கூடாது. மீறி இதேபோல் திறந்தால் கடைக்கு சீல் வைக்கப்படும் என்று எச்சரிக்கை செய்தனர். 

மேலும் செய்திகள்