காரமடையில் 250 படுக்கைகளுடன் கொரோனா சிகிச்சை மையம்

காரமடையில் 250 படுக்கைகளுடன் கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு வருகிறது.

Update: 2021-05-31 00:57 GMT
காரமடை,

காரமடை, சிறுமுகை, மேட்டுப்பாளையம் பகுதிகளில் கொரோனாவுக்கு தினந்தோறும் 150-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் அந்த பகுதிகளில் தனியார் மருத்துவமனை மற்றும் பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையங்கள் நிரம்பி வழிகின்றன.

 இதனால் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின்பேரில் காரமடை அருகே உள்ள தனியார் பள்ளியின் விடுதியை கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டு வருகிறது. இங்கு தற்போது 250 படுக்கைகளுடன் கொரோனா சிகிச்சை மையம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

 இந்த பணியை மேட்டுப்பாளையம் தாசில்தார் ஷர்மிளா, வருவாய் ஆய்வாளர் தெய்வ பாண்டியம்மாள் ஆகியோர் பார்வையிட்டனர்.


அப்போது அவர்கள் கூறுகையில், கொரோனா பரவல் அதிகரிப்பின் காரணமாக காரமடையில் உள்ள எஸ்.வி.ஜி.வி பள்ளியின் மாணவா் விடுதியில் 250 படுக்கைகளுடன் கொரோனா சிகிச்சை மையம் தயார் செய்யப்பட்டு வருகிறது. மேலும் தேவைப்பட்டால் அங்கு கூடுதலாக 50 படுக்கைகள் அமைக்கப்படும் என்றனர்.

மேலும் செய்திகள்