வேலூர் சைதாப்பேட்டை மலையில் புதையுண்ட நிலையில் பீரங்கி கண்டெடுப்பு

வேலூர் சைதாப்பேட்டை மலையில் புதையுண்ட நிலையில் பீரங்கி கண்டெடுக்கப்பட்டது.

Update: 2021-05-31 17:09 GMT
வேலூர்-

மலைக்கோட்டைகள்

வேலூருக்குப் பெருமைச் சேர்க்கும் வேலூர் கோட்டையை போல், வேலூர் நகரின் மையப்பகுதியில் சைதாப்பேட்டை, காகிதப்பட்டறை, ஓல்டுடவுன் பகுதிகளில் மலைத்தொடர்கள் அமைந்துள்ளன. அந்த மலைகளில் அடுத்தடுத்து 3 இடங்களில் கோட்டைகள் உள்ளன.

மக்களின் பார்வையில் இருந்து விலகி காணப்படும் இம்மலைக் கோட்டைகள் தற்போது பாழடைந்தும், செடி, கொடிகள், மரங்களின் ஆக்கிரமிப்புப் பிடியிலும் சிக்கி உள்ளன. இந்த மலைக்கோட்டைகளில் 70 அடி ஆழம் கொண்ட கற்களால் ஆன கிணறு, தியானமடம், குளம் போன்றவை அமைந்துள்ளன. இவற்றை எளிதில் சென்று பார்க்க முடியாது.

இந்த மலைக்கோட்டைகளை அந்தக் காலத்தில் போர் வீரர்கள் கண்காணிப்பு கோபுரங்களாக பயன்படுத்தி வந்துள்ளனர். போர் வீரர்கள், இந்த மலைக்கோட்டைகளில் அமர்ந்து சுற்று வட்டாரத்தை நோட்டமிடுவார்கள்.

இந்த மலையை பாவாஜிமலை, ராணி மலை என்றும், கோட்டைகளை குஜாராவ், முர்தாஜ் அகூர், சஜாராவ் என்றும் வரலாற்று தகவல் தெரிவிக்கிறது.

பீரங்கி கண்டெடுப்பு

இந்த நிலையில் வேலூர் சைதாப்பேட்டை மலைக்கு அப்பகுதியை சேர்ந்த வாலிபர்கள் சிலர் நேற்று சென்றனர். அப்போது மலைக்கோட்டைக்கு செல்லும் பாதையில் பீரங்கி மண்ணில் புதைந்த நிலையில் தென்பட்டதை பார்த்தனர். இந்த தகவலை அவர்கள் மலையில் இருந்து இறங்கியதும் ஊரில் தெரிவித்தனர். இது அந்த பகுதியில் காட்டுத்தீ போல் பரவியது. அதை தொடர்ந்து சிலர் அங்கு சென்று அந்த பீரங்கியை சுற்றி இருந்த மண்ணை அகற்றினர்.

மேலும் செய்திகள்