கர்நாடகாவில் இருந்து மது கடத்தி வந்த 14 பேர் கைது மதுபாக்கெட்டுகள், சொகுசு கார், 6 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

கர்நாடகாவில் இருந்து மது கடத்தி வந்த 14 பேர் கைது மதுபாக்கெட்டுகள், சொகுசு கார், 6 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

Update: 2021-06-01 00:27 GMT
காரிமங்கலம்:
கர்நாடக மாநிலத்தில் இருந்து மது கடத்தி வந்த 14 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து மது பாக்கெட்டுகள், சொகுசு கார் மற்றும் 6 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
வாகன சோதனை
கர்நாடக மாநிலத்தில் இருந்து தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் வழியாக இருசக்கர வாகனம் மற்றும் கார் மூலம் மதுபாட்டில்கள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் பாலக்கோடு துணை போலீஸ் சூப்பிரண்டு தினகரன், போலீஸ் இன்ஸ்பெக்டர் துரைராஜ், சப்-இன்ஸ்பெக்டர்கள் விஜய்சங்கர், செல்வராஜ், சபி மற்றும் போலீசார் நேற்று காரிமங்கலம் அருகே கும்பாஅள்ளி சோதனைச்சாவடியில் தீவிர வாகன சோதனை நடத்தினர். 
அப்போது கிருஷ்ணகிரியில் இருந்து தர்மபுரி நோக்கி வந்த ஒரு சொகுசு கார் மற்றும் 6 இருசக்கர வாகனங்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். பின்னர் அந்த வாகனங்களில் சோதனை செய்தபோது, சட்டவிரோதமாக கர்நாடக மாநிலத்தில் இருந்து மதுபாட்டில்கள் வாங்கி கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து சொகுசு கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் வந்தவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். 
மது பாக்கெட்டுகள்
அதில் சொகுசு காரில் வந்த தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியை சேர்ந்த ஜவகர் (வயது 35), தாடிசேரியை சேர்ந்த பசும்பொன் ராஜன் (35), கருவேல் நாயக்கன்பட்டியை சேர்ந்த இளங்கோ (47) என்பது தெரியவந்தது. மேலும் இருசக்கர வாகனத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஆவத்துவாடி பகுதியை சேர்ந்த கவுதம் (23), விக்னேஷ் (27), பாப்பாரப்பட்டி பகுதியை சேர்ந்த சஞ்சீவன் (27), கணபதி (35), தேவீரஅள்ளியை சேர்ந்த முத்துக்குமார் (28), என்னேகொல்புதூர் பகுதியை சேர்ந்த அனிச்சந்திரன் (36), தர்மபுரி மாவட்டம் பேகாரஅள்ளி பகுதியை சேர்ந்த சபரிநாதன் (32), கார்த்திக் (28), கோகுல்நாத் (26), பந்தாரஅள்ளி கருணாகரன் (35) மற்றும் அல்லியூர் வெங்கடேசன் (33) என்பது தெரியவந்தது 
இதனையடுத்து அவர்களிடம் இருந்து மொத்தம் 1,637 மதுபாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து மது கடத்தி வந்த 15 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் வந்த 1 சொகுசு கார் மற்றும் 6 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 
6 நாட்களாக..
காரிமங்கலம் அருகே கும்பாரஅள்ளி சோதனைச்சாவடியில் வாகன சோதனையில் தொடர்ந்து கடந்த 6 நாட்களாக மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
=====

மேலும் செய்திகள்