முடி திருத்தும் தொழிலாளர்களுக்கு ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்க கோரிக்கை

முடி திருத்தும் தொழிலாளர்களுக்கு ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2021-06-01 21:37 GMT
முடி திருத்தும் தொழிலாளர்களுக்கு
 ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்க கோரிக்கை
ஜெயங்கொண்டம், ஜூன்.2-
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் சுமார் 20-க்கும் மேற்பட்ட முடிதிருத்தும் தொழிலாளர்கள் உள்ளனர். இவரது ஊரடங்கு காரணமாக மிகவும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலையின் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அரசின் உத்தரவுப்படி கடந்த 50 நாட்களாக முடிதிருத்தும் (சலூன்) கடைகள் பூட்டியே கிடக்கின்றன. இதன்படி அரியலூர் மாவட்டத்தில் 700-க்கும் மேற்பட்ட முடிதிருத்தும் கடைகளும், ஜெயங்கொண்டத்தில் 300-க்கும் மேற்பட்ட முடிதிருத்தும் கடைகளும் அடைக்கப்பட்டு உள்ளதால் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முடிதிருத்தும் தொழிலாளர்கள் வருமானம் இன்றி தவித்து வருகின்றனர். மேலும் அவர்கள் கடை வாடகை, வீட்டு வாடகை, மின் கட்டணம், குடும்ப செலவிற்கு பணம் இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். கடந்த ஆண்டு முடி திருத்தும் தொழிலாளர்களுக்கு தமிழக அரசு சார்பில் நிவாரண தொகை வழங்கப்பட்டது. அதேபோல் தற்போதும் முடி திருத்தும் தொழிலாளர்களுக்கு கொரோனா நிவாரண தொகையாக ரூ.10 ஆயிரம் மற்றும் அரிசி, மளிகை உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்க வேண்டும் என்று அரியலூர் மாவட்ட தமிழ்நாடு மருத்துவ சமூக நலச்சங்கம் மற்றும் முடி திருத்தும் தொழிலாளர் நலச்சங்கம் சார்பில் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்