3,500 பேருக்கு காய்கறிகள் அடங்கிய தொகுப்பு வழங்கல்

3,500 பேருக்கு காய்கறிகள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது

Update: 2021-06-07 18:28 GMT
நொய்யல்
கரூர் மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் ஒன்றிய பகுதிகளை சேர்ந்தவர்களுக்கு காய்கறிகள், முட்டை அடங்கிய தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கரூர் மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் சேகர் என்கிற குணசேகரன் கலந்து கொண்டு, முன்கள பணியாளர்கள், ஏழை, எளியோர்கள் உள்பட 3,500 பேருக்கு காய்கறிகள், முட்டை அடங்கிய தொகுப்புகளை வழங்கினார். இதில் மாவட்ட ஒன்றிய, பேரூர், கிளை கழக பொறுப்பாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்