கொரோனா பரவலை தடுக்க வத்தல்மலை கிராமங்களில் வெளியாட்கள் நுழைய தடை

கொரோனா பரவலை தடுக்க வத்தல்மலை கிராமங்களில் வெளியாட்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-06-09 20:45 GMT
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டம் வத்தல்மலையில் பால் சிலம்பு, சின்னங்காடு, பெரியூர் உள்ளிட்ட 13 மலை கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் கொரோனா பரவலை தடுக்க வெளியாட்கள் உள்ளே செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதேபோல் இந்த மலை கிராமங்களை சேர்ந்த மக்கள் மருத்துவ சிகிச்சை, மருந்து வாங்குதல், விவசாய விளைபொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்வதற்காக மட்டும் தர்மபுரி உள்ளிட்ட வெளியூர்களுக்கு வந்து செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். இவர்களை கண்காணிக்கும் பணி வத்தல்மலை அடிவாரத்தில் அமைக்கப்பட்டுள்ள வனத்துறை சோதனைசாவடியில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இங்கு கண்காணிப்பு கேமராக்கள் மூலம் வெளியாட்கள் செல்கிறார்களா? என 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகிறது. பகல் நேரத்தில் பெண் வனக்காவலர்களும், இரவு நேரத்தில் ஆண் வனக்காவலர்களும் இந்த சோதனைச்சாவடியில் சுழற்சி முறையில் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.

மேலும் செய்திகள்