கோவை மாநகர சட்டம் ஒழுங்கு போலீஸ் துணை கமிஷனராக ஜெயச்சந்திரன் பொறுப்பேற்பு

கோவை மாநகர சட்டம்-ஒழுங்கு போலீஸ் துணை கமிஷனராக ஜெயச்சந்திரன் பொறுப்பேற்றார்.

Update: 2021-06-10 18:58 GMT
கோவை

கோவை மாநகர சட்டம்-ஒழுங்கு போலீஸ் துணை கமிஷனராக ஜெயச்சந்திரன் பொறுப்பேற்றார்.

துணை கமிஷனர் பொறுப்பேற்பு

கோவை மாநகர சட்டம்-ஒழுங்கு போலீஸ் துணை கமிஷனராக பணியாற்றிய ஸ்டாலின் மதுரை மாநகர தலைமையிடத்து போலீஸ் துணை கமிஷனராக மாற்றம் செய்யப்பட்டார்.

 இதையடுத்து கோவை மாநகர தலைமையிடத்து போலீஸ் துணை கமிஷனராக பணியாற்றிய ஜெயச்சந்திரன் கோவை மாநகர சட்டம்- ஒழுங்கு போலீஸ் துணை கமிஷனராக நியமிக்கப்பட்டார். 

அவர் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சட்டம்-ஒழுங்கு புதிய போலீஸ் துணை கமிஷனராக பொறுப்பேற்று கொண்டார். 

பின்னர் அவர் போலீஸ் கமிஷனர் தீபக் தாமோர், துணை கமிஷனர் உமா உள்ளிட்டோரை சந்தித்து வாழ்த்து பெற்றோர். 

அதிரடி மாற்றங்கள் 

கடந்த 1998-ம் ஆண்டு போலீஸ் துணை சூப்பிரண்டு ஆக பணியை தொடங்கிய ஜெயச்சந்திரன், 2007-ம் ஆண்டு பதவி உயர்வு பெற்று நெல்லை சட்டம்-ஒழுங்கு துணை கமிஷனராக பதவியேற்றார். 

2009-ம் ஆண்டு ஈரோடு போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றியபோது சில அதிரடி மாற்றங்களை கொண்டு வந்தார். 

மேலும் மக்கள் மத்தியில் பரவலாக போலீசார் செல்வதற்கு ஏற்ப ‘விஷுவல் போலீஸ்' என்ற திட்டத்தை துரிதப்படுத்தினார். 

இது ஈரோடு மாவட்ட மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதன் பிறகு அவர் திருவாரூர், சிவகங்கை, திருச்சி, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்